இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்தியாவில் தற்கொலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டு 1,29,887 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், , 2018ம் ஆண்டு நாடு முழுவதும் 1,34,516 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு (2019) மட்டும் 1,39 ,123 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இவர்களில் 42,480 பேர் விவசாயிகள் என்றும் தெரிவித்து உள்ளது.
2019ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தற்கொலைகள் நடைபெற்றுள்ள மாநிலங்களில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு 18,916 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
2வது இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இங்கு 13 ஆயிரத்து 493 பேரும் தற்கொலை செய்து கொண்ட னர். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்பவர்களின் வரிசையில் 16 தற்கொலைகள் உடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
அதுபோல நகரங்களில், கடந்த ஆண்டு, சென்னையில் நகரில் தான் அதிகம் பேர் தற்கொலை செய்ததாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 2018 ஆம் ஆண்டு 2,102 பேரும் செய்த நிலையில் கடந்த ஆண்டு 2,461பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தற்கொலையில், 3வது இடத்தில், மேற்கு வங்கம் , மத்திய பிரதேசம் கர்நாடகா மாநிலங்கள் உள்ளது.
மேலும், 2019ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டவர்களில் பட்டதாரிகள் மட்டும் 3.7 சதவீதம் பேர் என்றும் ஆவனக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.