கேரள மாநிலத்தில் நிதி அமைச்சராக இருப்பவர் தாமஸ் ஐசக். மலையாள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகளை தெரிவித்த அவர், போகிற போக்கில் வாமணனை வசை பாடி இருந்தார்.
தனது வாழ்த்து செய்தியில், ஓணம் பண்டிகையின் நாயகனான மகாபலி மன்னனை புகழ்ந்திருந்த அமைச்சர் தாமஸ், தேவையில்லாமல் வாமணனை வம்புக்கு இழுத்திருந்தார். ’மகாபலி மன்னன் யாரையுமே வேறுபடுத்தி பார்க்காதவன் – தன்னை ஏமாற்றிய வாமணனைக்கூட’’ என்பது அமைச்சர் தெரிவித்த வாழ்த்து.
அமைச்சரின் ட்விட்டரில் வாழ்த்துகளோடு வந்த இந்த வசையை படித்த கேரள மாநில பா.ஜ.க. தலைவர் சுரேந்தர், தனது முகநூல் பக்கத்தில், கொந்தளித்துள்ளார்.
‘’ வாமணன் யார்? மகா விஷ்ணுவின் அவதாரம். கோடிக்கணக்கான பக்தர்களால் பூஜிக்கப்படுபவர். அப்படிப்பட்ட வாமணனை, ஏமாற்றுக்காரர் என விமர்சித்த தாமஸ் ஐசக், மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என போர்க்கொடி உயர்த்தியுள்ளார், பா.ஜ,க. தலைவர்.
பல சர்ச்சைகள் வெடித்துள்ள கடவுள் தேசத்தில் புதிய சர்ச்சை.
-பா.பாரதி.