
உத்தர்பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ண மோகன் திருப்பதி என்ற 28 வயது இளைஞர், தன்னை பெற்ற தாய் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்தபோது, மிகவும் வாடி, முகப்புத்தகத்தில் தேடி ஒரு அன்னையை கண்டறிந்தார். அவர் தான் டெபோரா மில்லெர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இருவரும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்த்தும் ஒரு தாய் தமையன் உறவை அன்போடும் பாசத்தோடும் வளர்த்து வந்துள்ளனர்.
கிருஷ்ண மோகன், ஜனவரி 29 ஆம் தேதி திருமணன் செய்து கொள்ள முடிவு செய்தபோது, தன் முகப்புத்தக அன்னையை பாசத்தோடு அழைத்தார். மகனுக்கு திருமணத்தின் போது இன்ப அதிர்ச்சி கொடுக்க அந்தத் தாய், அழைப்பை ஏற்று அமெரிக்காவிலிருந்து உத்தர்பிரதேசத்தை அடைந்து திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெபோரா, தனக்கு குழந்தைகள் ஏதும் இல்லையென்றும். கிருஷ்ண மோகன் தனக்கு கிடைத்த அன்பு மகன் என்றும், அவனுடைய வாழ்க்கை எல்லா இன்பங்களையும் பெற்றிட வாழ்த்துவதாக உணர்ச்சிவயப்பட்டு கூறியிருக்கிறார்.
-ஆதித்யா
Patrikai.com official YouTube Channel