சூரரைப்போற்று படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து அமேசான் பிரைம் தளத்துக்கு விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இப்பட விற்பனை லாபத்தில் ரூ 5 கோடி சினிமா துறை மற்றும் மாணவ, மாணவியர்கள், கொரோனா தொற்றில் தன்னலம் பாராமல் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் போன்றவர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி ஒன்றரை கோடியை சினிமா துறைக்கு சூர்யா சமீபத்தில் பகிர்ந்தளித்தார். அடுத்து 1 கோடி பகிர்ந்தளிப்பது பற்றிய விவரம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அனைவருக்கும் வணக்கம். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு ‘கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது இருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்குப் பெரிய
நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.
பொதுமக்கள், திரைத்துறையினர், ‘கொரானா தொற்றிலிருந்து’ மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள் ஆகியோ ருக்கு ‘சூரரைப் போற்று: திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்து இருந்தோம். அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி ‘கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்து வர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவ துறை பணியாளர்கள் மேலும்: பொதுநல இந்தனையுடன் கொரனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்ப வர்களுக்கு 25 (இரண்டரை கோடி) கோடி ரூபாயை கல்வி ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.
ஐந்து கோடி ரூபாயில் 25 (இரண்டரை கோடி) கோடி ரூபாய் எனது திரைக்குடும் பத்தை சார்ந்தவர் களுக்கு சிறுபங்களிப் பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலா ளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர் களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப் பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள் (பிஆர் ஒ), திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
“கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்’ என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/ மாணவிக்கு மட்டும், கல்வி. கட்டணமாக அதிக பட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப் படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண் டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைகான தேர்வு அமையும். www,agaram,in இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். இந்தப்பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக் கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது. இந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சூர்யா கூறி உள்ளார்.
இவ்வாறு சூர்யா அறிக்கையில் கூறி உள்ளார்.