டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார்.
ஆகஸ்டு 2ம் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவர், ஹரியானா மாநிலம் குர்கானில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குணமடைந்த அமித் ஷா பின்னர் வீடு திரும்பினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதீத மயக்கம், உடல் சோர்வு ஆகிய உபாதைகள் காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோயாளிகள் இல்லாத வார்டில் அமித் ஷா சேர்க்கப்பட்டார். மருத்துவர்களின் சிகிச்சையின் மூலம் அவர் குணமடைந்துவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் சில நாட்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.
இந் நிலையில், இன்று உள்துறை அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அறவித்துள்ளது. சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அவர் தமது வழக்கமான அலுவல் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிகிறது.