சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு பொது மக்கள், சுகாதாரத்துறையினர் மட்டுமின்றி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களையும் பாதித்து வருகிறது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப ட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ந்லல உடல்நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel