முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி உடல்நலப் பாதிப்பு காரணமாக, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் இருந்த நிலையில், மூளையில் கட்டி இருந்தது தெரிய வந்தது. அதை அகற்ற ஆபரேசன் செய்யப்பட்டது. இதனால், அவர் கோமா நிலைக்கு சென்றார். அதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று முதல் மேலும் பின்னடைவை சந்தித்து உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. அதில், பிரணாப் முகர்ஜியின் ஏற்பட்டுள்ள நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக, மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.
ஒருவருக்கு, செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்பு கள், விரைவாக செயலிழப்பதுடன், பிற நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது மருத்துவ ரீதியிலான தகவல்.