காராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த 27 வயது இளைஞரான மோனிஷ் டட்நானி, துணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தார்.

கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்திய சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தால், கடனை அடைக்க முடியாமல் மோனிஷ் மிகவும் சிரமப்பட்டார். அவரது நண்பர் விவேக் சேவக் என்பவர், சுற்றுலா ஏற்பாட்டாளராக இருந்து வந்தார்.

ஊரடங்கு அவரையும் முடக்கியது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனத்தை திருட ஆரம்பித்தனர்.

ஓரளவு கையில் காசு புரண்டது. அதையே ஊரடங்கு நேரத்து தொழிலாக்கி கொண்டனர், இருவரும்.
இரு சக்கர வாகனம் ஒன்றை திருடிய போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

மோனிஷ் மற்றும் சேவாக்கிடம் இருந்து 10 இரு சக்கர வாகனங்களை நாக்பூர் நகர எல்லைக் குட்பட்ட சதார் காவல்நிலைய போலீசார் கைப்பற்றினர்.
இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாயாகும்.

-பா.பாரதி.