டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 36லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு 64ஆயிரத்து 617ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, (காலை 7 மணி நிலவரம்) இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 79,457 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,19,169 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 960 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64,617 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில், நேற்று மட்டும் 16,408 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு 7,80,689 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 1,93,548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து 7,690 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,62,401 ஆக உயர்ந் துள்ளது. நேற்று மேலும் 296 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 24,399 ஆக உயர்ந் துள்ளது.
தொடர்ந்து 2வது இடத்தில் ஆந்திர மாந்லம் நீடித்து வருகிறது. அங்கு, நேற்று மட்டும் 10,603 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,24,767 ஆக உயர்ந் துள்ளது. 99,129 பேர் சிசிச்சையில் உள்ளதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,754 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 3,884 ஆக அதிகரித்து உள்ளது.
3வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 4,22,085 ஆகவும், உயிரிழப்பு 7,231 ஆக உயர்ந்துள்ளது.