சென்னை:
மிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

இந்த அறிவிப்பால் மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தாலும், கல்வியாளர்கள் ஆபத்து என எச்சரிக்கின்றனர்.

அடிப்படை பாடம் குறித்த புரிதல் இன்றி, சுமார் 2,00,000 பேர் பொறியாளர் ஆவார்கள் என்று கூறும் வல்லுநர்கள், இவர்கள் மேல்படிப்புக்கோ, தனியார் நிறுவனங்களின் பணிக்கோ செல்லும்போது நம்பிக்கை இழக்க நேரிடும் என்றும், அரசு மற்றும் பொதுத்துறை பணியைப் பெற்றால் ஆபத்து என்றும் எச்சரிக்கின்றனர்.

அரசின் அறிவிப்பு தவறானது எனக் கூறும் வல்லுநர்கள், அரியர் வைத்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பதற்கு இப்போதைக்கு எந்த தேவையும் இல்லை என்றும் கூறுகின்றனர்.