சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள சென்னை உயர்நீதி மன்ற்ம, வரும் 7ந்தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தால், கடந்த 5 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்து, பின்னர் அரசு வழங்கிய தளர்வுகள் காரணமாக, காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீதிமன்றத்தை திறக்கக்கோரி, வழங்கறிர்கள் சங்கத் தலைவர்கள் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து, இதுதொடர்பாக பரிசீலிக்க ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு , நீதிமன்றங்களை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்து உள்ளது.
அதன்படி, தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உட்பட 6 டிவிஷன் பெஞ்சுகளும், உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் செயல்படலாம். இதில் வழக்கறிஞர்கள் நேரடியாக வாதாட அனுமதி வழங்கப்படுகிறது.
பின்னர் படிப்படியாக இதில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று இந்தக் குழு அறிவித்துள்ளது.