ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளில் கோரத்தாண்டம் ஆடி வருகிறத.
இன்று (ஆகஸ்டு 30) காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 2,51,62,189 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும், 8லட்சத்து 46ஆயிரத்து 642ஆக அதிகரித்த உள்ளது.
உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும்,7,368 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,51,62,189 ஆக உயர்நதுள்ளது.
தொற்றுபாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,75,04,219 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,46,642 ஆக அதிகரித்து உள்ளது.
உலகிலேயே கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,139,078 ஆகவும், இதுவரை 186,855 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதுவரை 17,506,054 பேர் குணமடைந்து உள்ளனர்.
2வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,846,965 ஆகவும், இதுவரை 120,498 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,408,799 பேர் குணமடைந்து உள்ளனர்.
3வது இடத்தில் இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால், ஒருநாள் பாதிப்பில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,539,712 ஆக உள்ளது. இதுவரை 63,657 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,712,520 பேர் குணமடைந்து உள்ளனர்.