லாஸ்ஏஞ்சல்ஸ்: மாபெரும் வெற்றி பெற்ற பிளாக் பாந்தர் படத்தின் நடிகர் சாட்விக் போஸ்மேன் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனது 43 வயதில் இறந்தார். கடந்த சில காலமாக அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோவாக வலம் வந்த பிளாக் பாந்தர் நாயகன் சட்விக் போஸ்மேன். இவருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டது.
இந்த நோயினால், கடந்த நான்கு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சாட்விக் போஸ்மேன் காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்ட நிலையிலேயே அவர் உயிர்பிரிந்ததாககூறப்படுகிறது.
43வயதேன ஆன அவரது மறைவு, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“பிளாக் பாந்தரில் கிங் டி’சல்லாவை உயிர்ப்பித்தது அவரது தொழில் வாழ்க்கையின் மரியாதை” என்று, அவர் இறப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மார்வெல் யூனிவர்ஸின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியான பிளாக் பாந்தர் படத்தில் நாயக னாக நடித்தவர் சட்விக் போஸ்மேன். அயன்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், தோர் போல இவருக்கும் மார்வெல் தனிக்கதை படங்களை தயாரித்து இருந்தது.
வகாண்டாவின் அரசனான பிளாக் பாந்தர், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உள்ளிட்ட படங்களில் தானோஸை அழிக்க தனது படையுடன் உதவி செய்வார். கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோ வகாண்டா எனும் தனி ராஜ்ஜியத்தையே உருவாக்கி அதனை ஆட்சி செய்து வந்த பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும், ஒட்டுமொத்த கருப்பின மக்களின் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றிருந்தார் சட்விக் போஸ்மேன்.
அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகத்தையே சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.