டெல்லி: இந்திய பொருளாதாரம் இந்த 3 காரணங்களால் அழிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு ராகுல் பதில் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 41 வது கூட்டத்தில், மாநிலங்களின் இழப்பீடு பற்றாக்குறையான ரூ .2.35 லட்சம் கோடியாக தீர்க்க இரண்டு வாய்ப்புகளை வழங்கி யது. இத்ந கூட்டத்தில் பேசும்போது, நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது கடவுளின் செயல்’ என்று கொரோனா தொற்று நோயை பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அமைச்சரின் பேச்சு கடும் விவாதப்பொருளாக மாறியது.
இந்த நிலையில், நிர்மலா சீத்தாராமனுக்கு ராகுல்காந்தி பதில் அளித்து டிவிட் பதிவிட்டுஉள்ளார். அதில்,
பணமதிப்பிழப்பு,
ஜி.எஸ்.டி,
தோல்வியுற்ற லாக்டவுன்
ஆகிய மூன்று செயல்களால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கூறியதில் உண்மையில்லை
என குற்றம் சாட்டி உள்ளர்.