புது டெல்லி:
கொரோனாதொற்றுப் பரவலைக் காரணம் காட்டி பிகார் பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனாபாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை பிகாரில் பேரவைத் தேர்தலை நடத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கொரோனாதொற்றுப் பரவலைக் காரணைம்ட காட்டி பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையம் அனைத்து விவகாரங்களையும் கவனத்தில் கொள்ளும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel