மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டங்களுக்குநேரில் சென்று ஆய்வு நடத்தி வரும் முதல்வர், நேற்று காலை கடலூர் மாவட்டத்திலும், மாலையில் நாகையிலும் ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இதையடுத்து, இன்று காலை திருவாரூர் வந்தடைந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மாவட் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர், பயனர்களுக்கு வீட்டுமனைப்பட்டா, கோவிட்-19 சிறப்பு உதவி தொகுப் பின் கீழ் புலம்பெயர்ந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கான மானியம், விலையில்லா வீட்டு மனை, பசுமை வீடு, பிரதம மந்திரி தொகுப்பு வீடு, அம்மா இரு சக்கர வாகனம், திட்டம் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
காவிரியில் உபரிநீர் திறக்கப்படும்போது அது கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரிஉபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடைமடை வரை வடிகால் வசதிகளை சிறப்புற ஏற்படுத்தி காவிரியில் வரும் அபரிமித உபரிநீரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்துக்காக கொண்டு செல்ல இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறனிர்.
தமிழகஅரசு எப்போதும் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் பாதுகாப்புக்காகவே பல்வேறு திட்டங்களை எப்போதும் செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.