ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரிர் மாநிலத்தில், ஏழுமலையான் கோவிலை கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்கான இடத்தை, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி  மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பதிக்கு சென்றால் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் ஐதிகம். ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவலுக்கு நாடு முழுவதும் இருந்து தினசரி லட்சக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வதும், கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்துவதும் அனை வரும் அறிந்ததே.
ஏழுமலையான தரிசிக்க திருப்பதி வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங் களில் ஏழுமலையானுக்கு கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி,  தமிழகத்தில் சென்னையின் புறநகர் பகுதியில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் இலவசமாக நிலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஐதராபாத், அமராவதி, ஒடிஷா, வாரணாசி, காஷ்மீரிலும் கோவில் கட்டும் நடவடிக்கையில் தேவஸ் தானம் இறங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏழுமலையானுக்கு கோவில் கட்ட அம்மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து,  திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, அங்கு சென்று, மாநிலஅரசு அதிகாரிகளுடன் கோவில் கட்டுவதற்கான இடத்தை  நேரில் சென்று ஆய்வு செய்தார்.