புதுடெல்லி: இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரிவகிதம் 28% என்பதிலிருந்து 18% என்பதாக குறைக்கப்பட்டால், அவற்றின் விலை ரூ.10000 வரை குறையும் என்றுள்ளார் பஜாஜ் ஆட்டோ மேலாண் இயக்குநர் ராஜீவ் பஜாஜ்.
“அதிகளவு ஜிஎஸ்டி வரிவிதிப்பால், சந்தையில் விரும்பத்தகாத சூழல் நிலவுகிறது. இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% என்பதாக குறைக்கப்பட்டால், அவற்றின் விலை ரூ.8000 முதல் ரூ.10000 வரை குறையும்.
மேலும், ஏற்றுமதி ஊக்கத்தொகை ரத்துசெய்யப்பட்டதானது மற்றொரு அதிர்ச்சியாகும். இந்த முடிவின் மூலமாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்திற்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வேலையிழப்பும், ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், நுகர்வோர்களுக்கான ஊக்கத்தொகையை அரசு வழங்க வேண்டும். அதிகப்படியான கட்டுப்பாடுகள், நுகர்வோருக்கான விலையில் 30%-35% அளவிற்கு ஏற்றத்தை உண்டாக்கியுள்ளது” என்றுள்ளார் ராஜீவ் பஜாஜ்.