டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், 1059 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கொரோனா பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. தினசரி  60 ஆயிரத்தை தாண்டியெ உயர்ந்துவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  67,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 32,34,474 ஆக உயர்ந்துள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் 63,173 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  இதனால் இதுவரை  நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,67,759 ஆக அதிகரித்து உள்ளது.  மொத்த பாதிப்பில் இதில் 76.30 ஆகும்.

நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும்  1,059 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதால் மொத்த உயிரழப்பு 59,449 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 1.84 சதவீதம் ஆகும்.

தற்போதைய நிலையில்,  கொரோனா பாதிப்பு 7,07,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 21.87 சதவீதம் ஆகும்.

 நேற்றைய நிலவரப்படி 8,23,992 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும்  இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் பரிசோதனை விகிதம், 10 லட்சம் பேருக்கு 26 ஆயிரத்து 685 மாதிரிகள் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி ஒரே ஒரு பரிசோதனைக்கூடம் புனேயில் இருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 1,524 பரிசோதனைக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.