ரியானா மாநில சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே சட்டசபை வளாகத்தில் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என சபாநாயகர் ஜியான் சந்த் குப்தா இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதனால் மொத்தமுள்ள 60 எம்.எல்.ஏ.க்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை அறிக்கையில் முதல்வர் கட்டார், சபாநாயகர் குப்தா, போக்குவரத்து அமைச்சர் சர்மா மற்றும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதனால் முதல்வர் கட்டார், சபாநாயகர் குப்தா ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு விதிகளின் படி முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

துணைசபாநாயகர் ரன்பீர் கங்வா, சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவார்.

கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என இன்று முடிவு செய்யப்படும்.

முதல்வரும், சபாநாயகரும் இல்லாமல் பேரவை கூட்டம் நடப்பது இதுவே முதன் முறையாக இருக்கும்.

’சர்டிபிகேட்’ இருந்தால் மட்டுமே அனுமதி என ஆணை பிறப்பித்த சபாநாயகரே, சட்டசபைக்குள் நுழைய முடியாத சூழல்.

-பா.பாரதி.