பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவனையில் சேர்ந்தார். அடுத்த 2 நாளில் அவர் கவலைக்கிடமான நிலைக்கு சென்றார். வென்ட்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது.
எஸ்பிபி உடல்நிலைபற்றி தினமும் மாலை யில் தகவல் தெரிவித்து வரும் அவரது மகன் சரண் இன்று இனிப்பான தகவலை வெளியிட்டார்.

அதில்,’என் தந்தை உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் 90 சதவீதம் குணம் அடைந்திருக்கிறார். விரைவில் அவர் எழுந்து வந்த நம்மை சந்திப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லோருடைய பிரார்த்தனையும் டாக்டர்களின் திறமையான செயல் பாடுகளும் சிகிச்சையும் அவரை இந்த ளவுக்கு குணமாக்கி இருக்கிறது.
அப்பாவின் உடல் நிலை குறித்த தகவலை ஆங்கிலத்தில் கூறுவது எதற்காக? தமிழில் கூறலாமே என்கிறார்கள். உலகம் முழு வதும் அப்பாவுக்கு ரசிகர்கள் உள்ளனர். அவர் தமிழ் உட்பட எல்லா மொழியில் பாடல்கள் பாடி இருக்கிறார். எல்லோருக் கும் பொதுவாக ஆங்கிலத்தில் தகவலை தெரிவிக்கிறேன். யாரும் கோபம் கொள்ள வேண்டாம்’ என தெரிவித்திருக்கிறார்.
https://drive.google.com/file/d/1sZygzBzhbToqjBXRh7a2odv_jmicQL6l/view?usp=drivesdk
[youtube-feed feed=1]