பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். திடீரென்று அவர் உடல்நிலை மோசமானதை யடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது
நேற்று காலை எஸ்பிக்கு கொரோனா நெகடிவ் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து சரண், ‘நான் டாக்டர்களுடன் ஆலோசித்து வருகிறேன் அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை தரப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது’ என்றார்.
பின்னர் மாலையில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
மருத்துவமனையில் என் அப்பாவை பார்த்தேன். அவரரும் என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். உடல் நலம்பற்றி விசாரித்தபோது தம்ஸ் அப் காட்டி நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
என் அம்மா பற்றியும் என்னைப்பற்றியும் சைகை மொழியில் விசாரித்தார். அவருக் காக எல்லோரும் பிரார்த்தனை செய்தது பற்றி கூறினேன். கோவிலிலிருந்து அவருக்கு வந்த பிரசாதங்கள், சாமி படங்கள் எல்லாம் அவர் படுத்திருக்கும் படுக்கைக்கு அருகிலேயே வைக்கப்பட்டி ருக் கிறது. அவரது அறையில் அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்படுவதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் செய்தார். மருத்துவமனை யில் திறமையான டக்டர்கள் அப்பாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்காக பிரார்த்னை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக் கிறேன். சீக்கிரமே அப்பா திரும்பி வருவார்’ என தெரிவித்தார் சரண்.
முன்னதாக மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், ’எஸ்பிபிக்கு வெண்டிலேட்டர் எக்மோ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது, அவருடைய உடல்நிலை சீராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.