கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த அனில்குமார், 11 ஆண்டுகள் தேசிய தடகள விளையாட்டு வீரராக இருந்தவர்.
2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
கேரள காவல்துறையில் வேலை கேட்டு, அனில்குமார் கடந்த 2013 ஆண்டு மனு செய்தார்.
அப்போது அவருக்கு வயது 34.
7 ஆண்டுகள் கழித்து காவல் துறையில் இருந்து அனில்குமாருக்கு இப்போது பதில் வந்துள்ளது.
‘’ காவல்துறையில் சேர்வதற்கான வயதை நீங்கள் கடந்து விட்டீர்கள்’’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் போலீஸ் வேலையில் சேர்வதற்கு வயது வரம்பு- 24.
பல ஆண்டுகளுக்கு முன்பாக விளையாட்டு வீரர்களை மாநில அரசே, நேரடியாக அரசு வேலையில் பணி அமர்த்தி வந்துள்ளது.அவர்கள், அரசு பணியாளர் தேர்வு எழுத தேவையில்லை.
இப்போது அப்படி செய்வதில்லை.
ஒலிம்பிக் வீரர் அனில்குமார், கடந்த 7 ஆண்டுகளாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் கொல்லம் மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
-பா.பாரதி.