புதுடெல்லி:

4-ம் கட்ட ஊரடங்கில் நாட்டில் மெட்ரோ ரெயில் சேவை செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் மத்திய அரசு அறிவிக்க உள்ள 4-ம் கட்ட ஊரடங்கு தளர்விலிருந்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க இருப்பதாக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் இருந்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதே நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மெட்ரோ ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்த பின்பே எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை வரும் செப்டம்பர் 1 முதல் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவைகயை சோதனை அடிப்படையில் தொடங்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரிகளிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.