வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் பெயரை கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பரில் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோபிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜோ பிடனை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இன்று குடியரசு கட்சி தேசிய குழு கூட்டம் நடந்தது. இதில் இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் ஆகிய இருவரின் பெயரையும், குடியரசு கட்சி தேசிய குழு தலைவர் ரோஜாவ் மெக்டேனியல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Patrikai.com official YouTube Channel