லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட்டின் 4ம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் குறைவாக எடுத்து ஃபாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அந்த அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் கைவிடபபட்டது.
நாளை ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் திறமையுடன் ஆடி, இங்கிலாந்தின் சொந்த மண் பந்துவீச்சை சமாளித்து நின்றால், மூன்றாவது டெஸ்ட்டை டிரா செய்து போட்டியை 1-0 என்ற அளவோடு முடிக்கலாம்.
ஒருவேளை நாளை பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரியும்பட்சத்தில், போட்டியை 2-0 என்ற கணக்கில் மோசமாக தோற்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.