புதுடெல்லி: தனது பிஎச்.டி. மாணாக்கர்களுக்காக, பரிசோதனை ஆய்வகங்களை குறிப்பிட்ட கட்டங்களாக திறக்க முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது டெல்லி பல்கலைக்கழகம்.
இதன்மூலம், கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, டெல்லி பல்கலையில் நுழையும் முதல் மாணாக்கர் அணியாக இந்த பிஎச்.டி. மாணாக்கர்கள் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முடிவின்படி, ஒவ்வொரு ஆய்வகத்திலும் 2-3 மாணாக்கர்களே அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம், சமூக இடைவெளி, முகக் கவசம் மற்றும் சேனிட்டைசர் மூலம் சுத்தம் செய்வது உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி பல்கலையின் பிஎச்.டி. மாணாக்கர்கள், தங்களின் விடுதிக்கு திரும்புவது குறித்து சமீபத்தில்தான் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தவகையில், விடுதிக்கு திரும்பும் மாணாக்கர்கள், தங்களை கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.