கொரோனா பாதிப்பால் 5 மாதமாக முடங்கி கிடக்கிறது. மீண்டும் படப் பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு திரை யுலகினர் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது மத்திய அரசு படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதற்கு நடிகர் விஷால் நன்றி சொல்லி டிவிட்டரில் மெசேஜ் பதிவிட்டுள்ளார்.
’ படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித் துள்ள மத்திய அரசுக்கு நன்றி . இது நம்பிக்கை அளித்துள்ளது. எல்லா படப் பிடிப்பு குழு வினரும் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். அதுமட்டு மல்லாமல் தமிழக அரசிடமி ருந்து இதற்கான பாதுகாப்புக்குரிய விதிக ளுடன் கூடிய அனுமதியையும் எதிர்பார்க் கிறோம்’ என கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் கடந்த மாதம் விஷால் பாதிக்கப்பட்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்து பூரண குணம் அடைந் தார். தற்போது படப்பிடிப்பில் தயாராகி உள்ளார் .
சக்கரா மற்றும் துப்பறிவாளன் 2ம் பாகம் படங்களில் விஷால் நடிக்கிறார். மிஷ்கி னுடன் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வந்தார். இருவருக்கும் மோதல் ஏற்பட்ட தையடுத்து மிஷ்கின் படத்திலிருந்து விலகினார், பட இயக்குனர் பொறுப்பை விஷாலே ஏற்க முடிவு செய்திருக்கிறார். ஆனாலும் முதலில் சக்கரா படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்,
Patrikai.com official YouTube Channel