கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய செய்திகள்: இன்றைய நிலவரப்படி தடுப்பு மருந்து மனித சோதனைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த சில நாடுகள் நாம் இங்கே அவ்வளவாக கேள்விப்படாதவை.
கியூபா நிறுவனத் தயாரிப்பு ?
தனித்துவ புதிய கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கு எதிரான பத்து தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும் பெரும்பாலான பெரிய மருந்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. எனவே, அவை உலகம் முழுவதும் அதிகபட்ச தாக்கத்தை உருவாக்குகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும், அநேகமாக அனைத்து நாடுகளிலும் உருவாக்கப்படுகின்றன. நாம் அதிகம் கேள்விப்படாத தடுப்பு மருந்தின் மனித சோதனைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த சில நாடுகள் பற்றி இங்கே காணலாம்.
கியூபா: ஹேபெரான் 01 என்ற தடுப்பூசியின் மனித சோதனைகளைத் தொடங்க ஹவானாவில் உள்ள அரசு பின்லே தடுப்பு மருந்து நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் சோதனைகளின் முடிவுகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது . முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளுக்கு மட்டுமே இந்த தடுப்பு மருந்து ஒப்புதல் பெற்றுள்ளதா, அல்லது மூன்றாம் கட்ட சோதனைகளுக்கும் ஒப்புதல் கிடைத்ததா என்பது உடனடியாகத் தெரியவில்லை. ரஷ்ய தடுப்பூசி, ஸ்பூட்னிக் வி, பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் கியூபாவும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைவான்: ஆட்இம்மியூன் கார்ப் அதன் சோதனை தடுப்பு மருந்தின் மனித சோதனைகளைத் தொடங்கும் தைவானின் முதல் நிறுவனம் ஆகும். முதற்கட்ட சோதனைகள் விரைவில் தேசிய தைவான் பல்கலைக்கழக மருத்துவமனையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 60 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படும்.
வட கொரியா: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கி வருவதாக இந்த கம்யூனிஸ்ட் நாடு கூறியுள்ளது. இது ஏற்கனவே மனித சோதனைகளில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சரிபார்க்கக்கூடிய வாய்ப்பு இலாத தகவல்கள் அந்த நாட்டிலிருந்து வெளிவருவதால், இந்த தடுப்பு மருந்து பற்றி அதிகம் தெரியவில்லை.
கூடுதலாக, ஜெர்மன் நிறுவனமான குரேவாக் உருவாக்கிய தடுப்பு மருந்தும் மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தடுப்பு மருந்து முதற்கட்ட சோதனைகளை முடித்த பின்னர் இரண்டாம் கட்ட மனித சோதனைகளைத் தொடங்கவுள்ளது. இது நாஸ்டாக்கில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதன் ஆரம்ப பொது சலுகை வர்த்தகத்தின் முதல் நாளில் இதன் விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இந்த தடுப்பு மருந்தின் குறைந்தபட்சம் 225 மில்லியன் டோஸைப் பெற ஐரோப்பிய ஒன்றியம் இந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் போட்டியில் வேறு பல நாடுகளும் உள்ளன. இவற்றில் பல தற்போது விலங்குகள் மீது சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. துருக்கி அரை டஜன் வெவ்வேறு தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகிறது. தாய்லாந்து, எகிப்து, நைஜீரியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளிலும் பல தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன.
வட கொரியா சோதனை செய்கிறது ?
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளைப் பற்றிய சமீபத்திய செய்திகள்:
- சுமார் 160க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மருத்துவ முன் சோதனைகள் அல்லது மருத்துவ சோதனைக் கட்டத்தில் உள்ளன. அவற்றில் 30 தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனைகளிலும், இறுதி கட்டமான, மனித சோதனைகளின் மூன்றாம் கட்டத்தில் ஆறு தடுப்பு மருந்துகள் உள்ளன. இந்தியாவில் குறைந்தபட்சமாக எட்டு தடுப்பு மருந்துகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு முதற்கட்ட சோதனைகள் முடிந்து இரண்டாம் கட்ட சோதனைகளில் நுழைந்துள்ளன.
Thank you: Indian Express