டெல்லி: நண்பனை பெரிதும் இழந்து தவிக்கிறேன் என அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளாள இன்று பிரதமர் மோடி உருக்கமாக கூறி உள்ளார்.
பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உடல்நலக் கோளாறு காரணமாக தனது 66வது வயதில் கடந்தாண்டு இதே நாளில் (ஆகஸ்டு 24) காலமானார்.
அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

கடந்த ஆண்டு இதே நாளில், அருண் ஜெட்லியை இழந்துவிட்டோம். என் நண்பனை பெரிதும் இழந்து தவிக்கிறேன். நாட்டுக்காக விடாமுயற்சியுடன், இரவு பகலாக உழைத்தார். அறிவு, புத்திசாலித்தனம் என பல ஆளுமைகளுடன் இருந்தவர் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
Patrikai.com official YouTube Channel