மனைவியுடன் வி்நாயகர் சதூர்த்தியை கொண்டாடிய சஞ்சய் தத்..

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

’அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்லப்போகிறார்’’ என சஞ்சய் தத்தின் நண்பர்கள் தெரிவித்த நிலையில், அவர் சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சஞ்சய் தத், தனது இல்லத்தில் விநாயகர் சதூர்த்தி பண்டிகையை நேற்று, தனது மனைவி மானயாதாவுடன் கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை அவர், தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
‘’வழக்கமாக விநாயகர் சதூர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடுவோம். இந்த முறை அது நடக்கவில்லை. இருந்தாலும் விநாயகர் நம்மை என்றும் பாதுகாப்பார். இந்த நல்ல நாள், நமது வாழ்க்கையில் எதிர்ப்படும் தடைகளை எல்லாம் நீக்கி விடும்’’ என்று விநாயகர் சதூர்த்தி வாழ்த்துகளையும் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

-பா.பாரதி.

[youtube-feed feed=1]