சென்னை: விரைவில் தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை விவரங்கள், நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளின் முடிவுகள், இறப்பு விகிதம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:
சாதாரண சளி, இருமல், மூச்சு திணறல் என எது இருந்தாலும் உடனடியாக மருத்துவமனை வர வேண்டும். இதன் மூலம் நோய் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
அமெரிக்காவில் கொரோனா சோதனைகளின் டிவுகள் வெளியாக 7 நாள் தேவைப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் ஆர்டிபிஷியல் கன்பர்மேஷன் என்ற டெஸ்ட் மூலம் சோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் வெளியாகின்றன.
அந்த முடிவுகளில் தவறுகள் இருந்தால், 48 மணி நேரத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இப்போது இவை ஆன்லைனில் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் 25 சித்தா மையங்கள் உருவாக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்தான் இறப்பு விகிதத்தை 2 பிரிவுகளாக தெரியப்படுத்துகிறோம்.
ஒன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள். மற்றொன்று இணை நோய்கள், கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளவர்கள். ஆகையால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.