கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு 150 நாட்களுக்கு மேலாகிறது .
இதுவரை கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்குவதால் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.
படப்பிடிப்பு தளங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது
* அதிக ரிஸ்க் உள்ள ஊழியர்கள் கூடுதல் எச்சரிக்கை எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களுடன் தொடர்புடைய முன்னிலைப் பணிகளில் இவர்களை ஈடுபடுத்த வேண்டாம்.
* முகக்கவசம் அனைவரும் அணிவது கட்டாயம்.
* அடிக்கடி கைகிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது அவசியம். கைக்கிருமி நாசினியை நுழைவாயிலில் வைத்திருப்பது அவசியம். எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது
* சுவாச இங்கிதங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். (தும்மல், இருமல் உள்ளிட்டவை)
* ஆரோக்கிய சேது ஆப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
* நுழைவாயிலில் தெர்மல் ஸ்க்ரீனிங் முறை வைத்திருக்க வேண்டும், கரோனா நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
* முடிந்த வரையில் 6 அடி தூர சமூக இடைவெளி கடைப்பிடித்தல் அவசியம்.
* வாகன நிறுத்துமிடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் வளாகத்துக்கு வெளியே சமூக இடைவெளி கடைப்பிடித்தல் முக்கியம்.
* வளாகத்தில் ஆட்கள் வரிசையைக் கட்டுப்படுத்த போதிய இடைவெளிக்கான அடையாளமிடப்பட்டிருக்க வேண்டும்.
* கோவிட் 19 தடுப்பு அளவுகோல்கள், வழிமுறைகள் கொண்ட போஸ்டர்கள், ஏவி மீடியா டிஸ்ப்ளேக்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
* சமூக இடைவெளியுடன் கூடிய உட்காருமிட ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
* ஆன்லைன், ஈ வாலெட், க்யூ ஆர் கோட் போல டிக்கெட்டுகள் வாங்க தனி நபர் தொடர்பில்லா வழிமுறைகள்
* பொதுப்பயன்பாடுகளின் இடங்கள், பணியிடங்களில் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
* யாருக்கேனும் கொரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தால், வளாகத்தையே கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் காக்கப்படுவது கட்டயாம்.
* அனைவரும் தங்கள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும், காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
* கொரோனா சந்தேகம் எழுந்தால் தற்காலிக தனிமைப்படுத்தல் அவசியம்.
* ஷூட்டிங் இடங்கள், ரெக்கார்டிங் ஸ்டூடியோக்கள், எடிட்டிங் அறைகள் உள்ளிட்டவைகளில் 6 அடி சமூக இடைவெளி அவசியம்
* காட்சிகள், தொடர் காட்சி அமைப்புகள், கேமரா இருப்பிடம், பணியாளர் இருக்கும் இடம், இருக்கை, உணவு முறைகள் ஆகியவற்றில் சமூக இடைவெளி காக்க வேண்டும்.
* ஷூட்டிங்கின் போது குறைந்த பணியாளர்கள், நடிகர்கள் இருந்தால் போதும்.
* ஷூட்டிங் செட்களில் வெளி ஆட்கள், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
* வெளிப்புறப் படப்பிடிப்பு என்றால் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த உள்ளூர் அதிகாரிகளின் உதவியை நாடுவது அவசியம்.
* ஸ்டூடியோக்களில், பல்வேறு அரங்குகளில் நடக்கும் வெவ்வேறு குழுவுக்கு, வெவ்வேறு நேரங்களில் வேலை ஆரம்பிக்கும், முடிக்கும் நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்
* தங்குமிட வசதிகளிலும் சமூக இடைவெளி அவசியம்.
* படப்பிடிப்பு தளங்களில் பிரத்யேக நுழைவாயில் வெளியேறும் வழி
* செட்கள், மேக் அப் ரூம்ஸ், வேன்கள் ஆகியவற்றை சீரான முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது அவசியம்.
* கையுறைகள், முகக்கவசங்கள், பிபிஇ கிட்கள் போதிய அளவில் இருப்பது அவசியம்.
* கேமரா முன் நடிக்கும் நடிகர்கள் நீங்கலாக மற்றவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
* உடைகள், விக்குகள், மேக் அப் பொருட்களை பகிர்வது குறைந்தபட்சமாக இருந்தால் நலம்.
* மேக் அப் கலைஞர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள் பிபிஇ கிட்களை பயன்படுத்த வேண்டும்.
* ஒரே சாதனத்தை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் போது கையுறைகள் கட்டாயம்
* லேபல் மைக்குகள் தவிர்க்கப்பட வேண்டும். இதை பகிர்தலும் கூடாது.
* உதரவிதானத்துடன் மைக்குகள் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
* குறைந்தபட்ச செட்-பிராப்பர்டிகளைப் பயன்படுத்த வேண்டும், அரங்கப் பொருட்களை சானிட்டைஸ் செய்வதும் அவசியம்.
This will give a new life to the film and TV serial industry which was lying closed for last 6 months
States can specify additional conditions to the SOP, if necessary
This will also provide a push to the economy: I&B Minister @PrakashJavdekar pic.twitter.com/AXkSTlluUV
— Ministry of Information and Broadcasting (@MIB_India) August 23, 2020