புதுடெல்லி: ‘பிஎம் கேர்ஸ்’ தொகுப்பிலிருந்து நிதியுதவிப் பெற்ற இரண்டு நிறுவனங்கள் தயாரித்த வென்டிலேட்டர்கள், சுகாதார அமைச்சகத்தின் தொழில்நுட்ப கமிட்டியின் தர மதிப்பாய்வு தேறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

ஜியோதி சிஎன்சி ஆட்டோமேஷன் மற்றும் ஆந்திரப் பிரதேஷ் மெட்டெக் ஸோன்(ஏஎம்டிஇஸட்) என்ற இரு நிறுவனங்கள், கடந்த மே மாதமே முன்தொகையாக ‘பிஎம் கேர்ஸ்’ தொகுப்பிலிருந்து ரூ.22.5 கோடியை முன்பணமாக பெற்றிருந்தன. அதேசமயம், அந்நிறுவனங்கள் ஜூலை மாதமே பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோதி சிஎன்சி ஆட்டோமேஷன் என்ற குஜராத் நிறுவனம் தயாரித்த வென்டிலேட்டர்கள் தரமற்றவை என்று அகமதாபாத் சிவில் மருத்துவமனையால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.