ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கும் படம் சூர்யாவின் சூரரைப்போற்று படத் தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். பிரதான வேடங் களில் மோகன் பாபு, பரேஷ் ராவல் நடித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் இப்படக் தியேட்டரில் வெளியாகுமா, ஓடிடி தளத்தில் வெளியாகுமா? என்ற ஊசாலாட் டம் இருந்துவந்தது. தற்போது வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏர் டெக்கான் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடித்து பற்றி நடிகர் சூர்யா கூறியதாவது:
டைரக்டர் சுதாவிடம் கதையை நான் கேட்ட தருணத்தில், அதை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரிக்கவும் விரும்பினேன். கேப்டன் கோபிநாத்தின் பாத்திரம் எனக்கு ஒரு சவாலாக இருந்தபோதிலும், இறுதியாக எங்கள் படைப்பை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. நாம் இதற்கு முன் சந்தித்திராத இப்போதிருக் கும் இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் தங்கள் வீடுகளி லிருந்து “சூரரை போற்று”ஐப் பார்க்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடை கிறேன். இந்த படம் எங்கள் அன்பின் உழைப்பு, இது இப்போது உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது என்பதில் சந்தோஷமாக உணர்கிறேன்’ என்றார்.
பட ஹீரோ சூர்யா பற்றி இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது:
சூர்யாவை இயக்குவது ஒரு மகிழ்ச்சியான விஷயம். கேப்டன் கோபிநாத் கதாபாத் திரத்திற்கு அவர் தான் எனது முதல் மற்றும் கடைசி தேர்வாக இருந்தார். அமேசான் ப்ரைம் வீடியோவில் படத்தை பிரீமியர் செய்வது ஒரு புதிய அனுபவம் மற்றும் அதை ஆவலாக எதிர்பார்த்து காத் திருக்கிறேன்.
உலகெங்கிலும், பல்வேறு வகையான மக்கள் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்பது ஒரு படைப்பா ளருக்கு உற்சாகமாமான விஷயம் தான்.
சூரரைப் போற்று பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த படம், இது உலகளாவிய இணைப்பைக் கொண்ட ஒரு இந்தியக் கதை. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில்
நடந்த நிகழ்வுகள் மற்றும் போராட்டங்க ளை அடிப்படையாகக் கொண்ட படம்.
இவ்வாறு சுதா கொங்கரா கூறினார்.