சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தவது தொடர்பாக சட்டப்பேரவை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில், சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு நடத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் கூட்டப்பட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் முன்கூட்டியே நிறைவு பெற்றது. ஏப்ரல் 9ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 31-ம் தேதியே நிறைவு பெற்றது.
பொதுவாக, சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றை 6 மாத இடைவெளிக்குள் கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. அந்த நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் மாத்துடன் 6 மாதம் முடிவடைகிறது. இதனால், அதற்குள் சட்டமன்றத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தற்போதைய சட்டசபையில், கூட்டத்தை நடத்த இயலாது என்பதால், கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்தலாமா என்பது குறித்து சட்டமன்ற அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட உள்ள நிலையில் ஆய்வு நடத்தப்படுகிறது.