லண்டன்: பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் மூன்றாவது & இறுதி டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களை எடுத்துள்ளது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்தது இங்கிலாந்து. துவக்க வீரர் பர்ன்ஸ், கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் சோபிக்காத நிலையில், ஜாக் கிராலேயும், ஜோஸ் பட்லரும் ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஜாக் கிராலே 269 பந்துகளை சந்தித்து 171 ரன்களை எடுத்து இன்னும் களத்தில் உள்ளார். இவர் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஸ் பட்லர் 148 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இவரும் சதமடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே 300 ரன்களை இங்கிலாந்து கடந்துவிட்டதால், இரண்டாம் நாளில் பெரிய ஸ்கோரை அடித்து, பாகிஸ்தானை மிரளச் செய்ய வாய்ப்புள்ளது. இந்த டெஸ்ட் டிரா ஆனாலும்கூட, இங்கிலாந்து தொடரை வென்றுவிடும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

 

[youtube-feed feed=1]