புதுடெல்லி: ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் நவீன சொகுசு வசதியுடன் கூடிய 44 சிறப்பு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிக்கான டெண்டரை, சீன நிறுவனம் கைப்பற்ற முனைந்த காரணத்தால், இந்திய ரயில்வே அதை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்த டெண்டரில் சில இந்திய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உள்பட 6 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், சீனாவை தலைமையாக சிஆர்ஆர்சி எலக்ட்ரானிக்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் டெண்டரை கைப்பற்ற முயற்சித்தது.
இதையறிந்த இந்திய ரயில்வே ‘வந்தேபாரத்’ ரயில் பெட்டிக்கான சர்வதேச டெண்டரை திடீரென ரத்து செய்தது.
லடாக்கில் சீனா நடத்திய படுகொலை சம்பவத்தால், இந்திய-சீன நாடுகளிடையே பகை ஏற்பட்டுள்ளது. சீனா மீதும், சீனா சார்ந்த நிறுவனங்கள் மீது இந்தியா பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், விரைவு ரயில்களுக்கான 44 ரெயில் பெட்டிகளை தயாரிப்பது தொடர்பாக விடப்பட்ட சர்வதேச டெண்டரை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டரிலும் இத்தகவல் வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.