ஜெருசலேம்: இஸ்ரேலின் முந்தைய தலைநகர் டெல் அவிவ் நகரிலுள்ள ஏரியில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மிதவை தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கொரோனா பரவல் காரணமாக, பல நாடுகளிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அத்தொழில் பெரிய நசிவை சந்தித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிலும் இந்த நிலைதான்!

அதேசமயம், திரைப்பட ரசிகர்களை கவர்வதற்காக, டெல் அவிவ் நகர நிர்வாகம் மிதக்கும் திரையரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இம்முயற்சி அந்நகர மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இதன் முன்னோட்ட நிகழ்ச்சியாக கடந்த வியாழக்கிழமை 200க்கும் மேற்பட்டோர், 70க்கும் மேற்பட்ட படகுகளில் சமூக இடைவெளியுடன் பெரிய திரையில் சினிமாவை கண்டு ரசித்தனர். இது மக்களைக் கவர்ந்துள்ளதால் இம்மாதம் இறுதி வாரத்தில் தினமும் மாலை 2 படங்கள் திரையிடப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் கொரோனா தாக்கம் சற்று கட்டுக்குள் இருந்தாலும், இதுவரை 1 லட்சத்து 716 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மொத்தம் 809 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

[youtube-feed feed=1]