குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல ஏர் இந்தியா நிறுவனம், இரண்டு போயிங் ரக விமானங்களை விலைக்கு வாங்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்தும் ‘ AIR FORCE ONE’ விமானத்தில் உள்ள வசதிகள் கொண்ட இந்த விமானத்தில், ’மினி’ மருத்துவமனை, கூட்ட அரங்கு, உள்ளிட்ட தனித்தனி அறைகள் உள்ளன.
போயிங் நிறுவனம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இரு விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது.
ஆனால், அமெரிக்காவில் ஆயிரத்து 365 கோடி ரூபாய் செலவில் அதி நவீன பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு, இந்த விமானம் இப்போது தான் ரெடியாகி உள்ளது.
எதிரிகள் ஏவுகணை வீசினால், தானாகவே எதிர் தாக்குதல் நடத்தும் வசதி உள்ளிட்ட பல பாதுகாப்பு சாதனங்கள் இந்த விமானத்தில் உள்ளன.
எங்கும் நிற்காமல் 17 மணி நேரம் தொடர்ச்சியாக இந்த விமானத்தால் பறக்க முடியும். முதல் விமானம் அடுத்த வாரம் இந்தியா வர உள்ளது. இன்னொரு விமானம் இந்த ஆண்டு கடைசியில் இந்தியா வந்து சேரும்.
-பா.பாரதி.