சில மாதங்களுக்கு முன்பு கங்கணாவின் சகோதரி ரங்கோலி உண்மைக்குப் புறம்பாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் ட்வீட் செய்ததால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

தொடர்ந்து அவரது குழு ஒன்று புதிய கணக்கை ஆரம்பித்து அதன் மூலம் கங்கணாவின் கருத்துகள் பகிரப்பட்டிருந்தன.

டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கங்கணாவின் கருத்து, காணொலிகள், பேட்டிகள் இந்தக் கணக்கின் மூலம் அதிகாரப்பூர்வமாகப் பகிரப்பட்டன. தற்போது கங்கணா தனிப்பட்ட முறையில் மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார்.

கங்கணா ட்விட்டரில் இணைந்ததைத் தொடர்ந்து #BollywoodQueenOnTwitter என்கிற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

[youtube-feed feed=1]