‘ஜகமே தந்திரம்’, ‘கர்ணன்’ மற்றும் ‘அத்ரங்கி ரே’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இந்தப் படங்களுக்கு பிறகு ‘கோமாளி’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
தற்போது பிரதீப் ரங்கநாதனிடம் தனுஷ் பேசியிருப்பதாகவும், அவருக்குப் பொருந்தும் வகையில் கதை ஒன்றை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கதையை முழுமையாக முடித்து அது தனுஷுக்கு பிடிக்குமாயின் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.