கோவை: 2ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும், அதைப்பொருட்படுத்தாமல், பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால், தமிழக மாணாக்கர்களின் மருத்துவ கனவு கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்பவரது மகள், பிளஸ்2 முடித்து விட்டு, மருத்துவம் படிப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக தனியால் பயிற்சி நிறுவனத்தில், நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி பல் மருத்துவ படிப்பான பி.டி.எஸ். படிப்பில் சேர முயற்சி செய்தார். ஆனால், நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் அவரது கனவு பொய்த்து போனது. இருந்தாலும் இந்த ஆண்டு நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தொடர்ந்து பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு அவர் திடீரென அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வில் வெற்றி பெறுவோமா பெறுவோமா? மாட்டோமோ என்று கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொள்வது ஆண்டுதோறும் வாடிக்கையாகி வருகிறது.