விருது கிடைத்ததால் விருந்து கொடுத்து , வம்பை விலைக்கு வாங்கிய பெண் தாசில்தார் ஒருவரின் சோகக்கதை இது:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர், ஜெயசித்ரா.
கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியதால்,அவருக்கு முதல்வரின் சிறப்பு விருது அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த விருது வழங்கப்பட்ட 3 வருவாய் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
விருது பெற்ற மகிழ்ச்சியை கொண்டாட இந்த பெண் தாசில்தார், பெரும் கும்பலை கூட்டி விருந்து அளித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி அருகேயுள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் நடந்த இந்த விருந்தில் துணை ஆட்சியர்கள் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். நூறு பேர் வரை கலந்து கொண்ட இந்த பிரியாணி விருந்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
கொரோனாவை தடுத்ததால் விருது வாங்கிய பெண் தாசில்தார், கொரோனாவை பரப்பும் வகையில் பெரும் கும்பலை கூட்டி விருந்து கொடுத்தது, உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விருந்தளித்த தாசில்தார் ஜெயசித்ராவை இடமாற்றம் செய்து காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார்.
-பா.பாரதி.