மும்பை: ஐபிஎல் தொடர் ஸ்பான்ஸராக ட்ரீம் 11 நிறுவனம், ரூ.222 கோடிக்கு தேர்வு செய்யபப்பட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்து உள்ளார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆ னால் மற்ற நாடுகளை தாக்கிய கொரோனா இந்தியாவையும் கடுமையாக தாக்கியது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அண்மையில் அறிவித்து இருந்தார்.
ஐபிஎல் தொடரில் விளையா உள்ள 8 அணிகள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந் நிலையில், ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸரிலிருந்து சீன நிறுவனமான விவோ திடீரென விலகியது.
அதை தொடர்ந்து, ஐபிஎல் தொடருக்கான ஸ்பான்ஸர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்க்கான போட்டியில் களமிறங்கியுள்ளனர். அதன் தொகையாக ரூ.300 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அந்த வகையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களாக ட்ரீம் 11, பைசூஸ், டாடா, அன்ஹக்கேடமி, பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் யார் என பிசிசிஐ இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், அந்த ஏலத்தில் ட்ரீம் 11 நிறுவனத்துடன் ரூ.222 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் வெளியிட்டு உள்ளார்.