சென்னை:

துரையை தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் அதிமுக புறநகர் மேற்கு மாவட்டக்கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைகூட்டத்தில் பொதுச் செயலாளராக ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டார். ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும். மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக அறிவிக்ககோரி அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையை தமிழகத்தின் 2 ஆம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தென்மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.