டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 57,381 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், ஒரு நாளில் அதிகம் பேர் குணமான எண்ணிக்கை இதுவேயாகும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த குணம் பெற்றோர் வீதம் இப்போது 70 சதவீதத்தை தாண்டியுள்ளது.

அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 50 சதவீதம் குணம்பெற்றோர் விகிதத்தை தாண்டியுள்ளன. மேலும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளன.

18,08,936 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர். இந்தியாவின் வழக்கு இறப்பு விகிதம் உலகளாவிய சராசரிக்குக் கீழே உள்ளது. தொடர்ச்சியான நேர்மறையான சரிவில் தற்போது 1.94 சதவீதமாக உள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி வரை இந்தியா 2.85 கோடிக்கும் அதிகமான கொரோனா  சோதனைகளை நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 8,68,679 சோதனைகள் நடத்தப்பட்டன. நாட்டில் 1,465 ஆய்வகங்களில் சோதனைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் 968 அரசு ஆய்வகங்கள் மற்றும் 497 தனியார் ஆய்வகங்கள் உள்ளன.

ஆகஸ்ட் 16ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 25.8 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகள் மற்றும் 49,980 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 18.6 லட்சத்திற்கும் அதிகமானோர் குணம் பெற்று உள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி நிலவரப்படி, 25 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட கோவிட் தொற்றுகள் பதிவு செய்த மூன்றாவது நாடு இந்தியாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.