பாட்னா: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பீகார் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென, முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உட்பட சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தாண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில், சட்டசபைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் லோக்ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மக்கள் உயிராபத்தில் இருக்கும் நேரத்தில், தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு தேர்தல் கமிஷன் உத்தரவாதம் தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால், வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.