கொரோனா ஊரடங்கு இதோ முடிகிறது அதோ முடிகிறது என்று போக்கு காட்டி 5 மாதம் ஓடிவிட்டது. ஆனால் தொற்று தான் குறைந்த பாடில்லை. அதோடு எந்த வேலையும் உருப்படியாக நடக்கவில்லை. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது சினிமா படப்பிடிப்புகள். படப்பிடிப்பு தொடங்கினாலும் 50 முதல் 100 பேருக்கு மிகாமல் நபர்கள் பணியாற்ற மட்டுமே அனுமதி கிடைக்கும் சூழல் உள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன் னியின் செல்வன், ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படங்கள் சரித்திர பின்னணி கொண்டாதாக இருப்பதால் போர்க்களக் காட்சிகள், போராட்ட காட்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் துணை நடிகர்கள் பயன் படுத்த வேண்டிய தேவை உள்ளது. 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற பட்சத்தில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பை எப்போது தொடங்கி எப்போது முடிப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது
நடிகர், இயக்குனர் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 படம் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு குஜராத்தில் ஆயிரம் பேர் களை திரட்டி காட்சி படமாக்க திட்ட மிட்டிருந்தார். ஆனால் கொரோனா ஊரடங்கும் அதற்கான கட்டுபாடுகளும் அக்காட்சியை படமாக்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் அப்படத்தின் படப்பிடிப்பை சில காலத்துக்கு தள்ளி வைத்துவிட்டு வேறு படத்துக்கான ஸ்கிரிப்ட் ரெடி செய்கிறார். தவிர தனது உதவியாளர் பத்ரி இயக்கும் படமொன் றில் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறா ராம்.
அவங்க அவங்க எடுக்கற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு என்பதுபோல் சுந்தர் சியும் வரும் படங்களை வாங்கிப் போடுவதில் கவனமாக இருக்கிறார்.