சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திமுகவில் இருந்து ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மாவட்டச்செயலாளர் பதவி தரவில்ல என்று திமுக தலைமைமீது குற்றம் சாட்டிய, ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ குகசெல்வம், கடந்த வாரம் திடீரென டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கழக கட்டுப்பாட்டை மீறியதாகவும், கழகத்தக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் கூறி ‘கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது’ என அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரிடம் இருந்த திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் பறிக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக தலைமையின் நோட்டீஸ்க்கு கு.க.செல்வம் பதில் அளித்த இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கு.க.செல்வம் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில், திமுக தலைமையின் நோட்டீஸ்க்கு அவர் அளித்த பதில், ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாததால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.